ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

தேர்வில் வெற்றியடைவது எப்படி?

ADVERTISEMENTS









தேர்வு என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும். தேர்வை நாம் எதிர்கொள்ளும் போது, அன்றாடம் நாம் செய்யும் பணிகளில் புதிதாக ஒரு பணி சேர்ந்துள்ளது என்றே எண்ணிக்கொள்ள வேண்டும். பலவீனமானவர்களே பரீட்சையை நினைத்து பயப்பட வேண்டும். முறையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தேர்வைப் பற்றிய பயமே இருக்காது. நல்ல மார்க்குகள் வாங்க வேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் அதையே நினைத்து மனதைக் குழப்பிக் கொண்டிருந்தால் பரீட்சையில் கவனம் செலுத்த முடியாது. மார்க்குக்காக தேர்வு எழுதுவது என்பதெல்லாம் சாதாரண விஷயம். தேர்வுகள் நம் குறைகளையும், திறமைகளையும் கண்டுபிடிக்க அளிக்கப்படும் ஒரு அரிய வாய்ப்பு. எதிர்காலத்தில் வரும் பெரிய காரியங்களைச் செய்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதற்காகவே இப்பொழுது பரீட்சைகள் வருகின்றன. வருங்காலத்தில் சந்திக்கப் போகும் பலவிதமான பரீட்சைகளுக்கு இது ஒரு முன்னோடி என்று நம்பினால் தேர்வை சந்திப்பதில் ஒரு புத்துணர்ச்சியே உண்டாகும். மனதிலிருந்த பயம் நீங்கி நீங்களே அடுத்து தேர்வு எப்போது வரும் என்று எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். யார் தன்னைத்தானே தேர்வுக்கு தயாராக்கிக் கொள்கிறாரோ, அவர் வலிமையானவராக முன்னேறுகிறார். அப்படிப்பட்ட தனிமனிதர்களைக் கொண்ட நாடு தனித்துவம் பெறுகிறது. இதற்கு உதாரணமாக ஜப்பானியர்களை கூறலாம். அவர்களுக்கு ஜப்பானியர், ஜப்பானியர் அல்லாதவர் என இரண்டு பிரிவினரைத் தான் தெரியும். இதே மனநிலையில் ஒவ்வொரு மனிதரும் நாம், நமது நாடு என்ற அடிப்படையில்  தங்களை தயார்படுத்திக் கொண்டால் நம்நாடு மிகப்பெரும் வளர்ச்சியடையும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். தேர்வு என்பது வெறும் காகிதத்தில் எழுதி மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது மட்டுமல்ல. தேர்வு ((EXAMINATION)) என்பது தன்மீது நம்பிக்கை கொண்டு தன்னைத் தயார்படுத்தினால் அது நாட்டிற்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும். தன்னை உயர்த்துவதன் மூலம் நாட்டையும் உயர்த்தலாம். இதையே (EXAM  I  NATION) உணர்த்துகிறது.

தேர்வில் நீங்கள் பெறும் வெற்றியைக் கொண்டாட நாடே உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதனால் தேர்வு பயத்தை நீக்கிவிட்டு வெற்றியுடன் போராடுங்கள், பாராட்டு உங்களைத் தேடிவரும்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS