ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மை தரும் பகமாலினி!

ADVERTISEMENTS









பகமாலினி தேவிக்கு ஒளியைப் பரப்பும் சிவந்த திருமேனி, புன்முறுவல் பூத்த அழகிய திருமுகம், மூன்று கண்களும் ஆறு கரங்களும் உடையவள். இடது திருக்கரங்களில் செங்கழு நீர் மலர், பாசம், கரும்பு வில் ஆகியவற்றையும், வலக்கரங்களில் தாமரை மலர் அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றையும் ஏந்தியவன். இவளைப் போலவே தோற்றமளிக்கும் சக்தி கணங்கள் சூழ பக்தர்களுக்கு அருள் செய்யும் வடிவினளாக இவள் வீற்றிருக்கிறாள். பகம் என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். செல்வம், தர்மம், புகழ், ஸ்ரீ, ஞானம் என என்றும் மங்காத செல்வங்களை உடையவள். அந்த ஐஸ்வர்யங்களையெல்லாம் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்குபவளாக விளங்குவதால். இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்றால் யோனி என்றொரு பொருளும் உண்டு. இந்த பகமெனும் தம்மையே பெண்மைக்கு உரியது. எனவே பெண்களுக்கு உரிய தெய்வமாகவும், அவர்களுக்குப் பலவிதமான நன்மைகளை அளிப்பவளாகவும் பகமாலினி விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் அனைத்து மக்களையும் தன் வசப்படுத்தும் சித்தி கிடைக்கும். மூவுலகும் அறியும் வண்ணம் பிரபலமான நிலை உண்டாகும். எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். எதிரிகளை அழிக்கும் வழிமுறைகளையும், அவர்களை வெல்லும் வல்லமையையும் தன் பக்தனுக்குக் கொடுப்பதில் பகமாலினி வல்லவள். திருமணமான தம்பதிகளிடம் மகிழ்ச்சியை, அன்னியோன்யத்தை உருவாக்கி ஆனந்தம் கொடுப்பதும் பகமாலினி தேவிதான். பெண்களுக்கு உரிய தெய்வமாக விளங்கும் இவள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாகவும், அவர்களுக்கு சுகப்பிரசவமாகவும் அருளுகிறாள். குறைப்பிரசவம், கரு கலைந்து போகுதல் போன்ற குறைபாடுகள் இவளை வணங்குவதால் அறவே நீங்கும்.

லவுகீக வாழ்வில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கும் பகமாலினி, ஆன்மீக ரீதியாக தன் பக்தனுக்கு எல்லா தெய்வங்களையும் ப்ரீதி பண்ணும் தன்மையையும், அளப்பரிய சாதனைகளைச் செய்யும் வல்லமையையும் கொடுக்கிறாள். மிகப்பெரிய ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றை பகமாலினியின் அருள் இருந்தால் அனாயாசமாகச் செய்து விடலாம். தனக்குத் தானே எதிரியாக விளங்கும் காமம், க்ரோதம், லோபம் போன்ற பகைவர்களை வெல்லுவதும் இவளது பக்தர்களுக்கு மிகச் சுலபமாகிறது. தன்னை வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மையை அருளி, எல்லா நிலையிலும் ஜயத்தைக் கொடுப்பவள் பகமாலினி. பகமாலினி நித்யாவுக்கான அர்ச்சனை:

ஓம் பகமாலின்யை நமஓம் பகாயை நமஓம் பாக்யாயை நமஓம் பகின்யை நமஓம் பகோதர்யை நமஓம் குஹ்யாயை நமஓம் தாக்ஷõயண்யை நமஓம் கன்யாயை நமஓம் தக்ஷயக்ஞ விநாசின்யை நமஓம் ஜயாயை நமஓம் விஜயாயை நமஓம் அஜிதாயை நமஓம் அபராஜிதாயை நமஓம் ஸுதீப்தாயை நமஓம் லேலிஹானாயை நமஓம் கராளாயை நமஓம் ஆகாச நிலயாயை நமஓம் ப்ராஹ்ம்யை நமஓம் பாலாயை நமஓம் ப்ரஹ்மசாரிண்யை நமஓம் ப்ரஹ்மாஸ்யாயை நமஓம் ஆஸ்யரதாயை நமஓம் ப்ரஹ்வ்யை நமஓம் ஸாவித்ர்யை நமஓம் ப்ரஹ்மபூஜிதாயை நமஓம் ப்ரஜ்ஞாயை நமஓம் மாத்ரே நமஓம் பராயை நமஓம் புத்தயே நமஓம் விச்வமாத்ரே நமஓம் சாச்வத்யை நமஓம் மைதர்யை நமஓம் காத்யாயன்யை நமஓம் துர்காயை நமஓம் துர்கஸந்தாரிண்யை நமஓம் பராயை நமஓம் மூலப்ரக்ருதயே நமஓம் ஈசானாயை நமஓம் ப்ரதானேச்வர்யை நமஓம் ஈச்வர்யை நமஓம் ஆப்யாயன்யை நமஓம் பாவன்யை நமஓம் மங்கலாயை நமஓம் யமாயை நமஓம் ஜ்யோதிஷ்மத்யை நமஓம் ஸம்ஹாரிண்யை நமஓம் ஸ்ருஷ்ட்யை நமஓம் ஸ்தித்யந்தகாரிண்யை நமஓம் அகோராயை நமஓம் கோர ரூபாயை நம

நம் மனதில் உள்ள ஒவ்வொரு காம்யத்தை (ஆசையை), பலனைப் பொறுத்து பகமாலினி தேவியை அதற்குரிய முறையில் உபதேசம் பெற்று ஆராதித்தால், அந்தந்த விசேஷமான பலன்கள் கிட்டும். உதாரணமாக, தாமரைப்பூ, கொன்றை, அரளி, அல்லி ஆகிய பூக்களை முறையே நான்கு வர்ணத்தவரும், அவரவர் வர்ணத்துக்கேற்ற பூவை, வாழைப்பழம், தேன், நெய் கலந்த த்ரிமதுரத்தில் தோய்த்து இவளுக்கு ஹோமம் செய்தால் அனைத்து காரியங்ளும் வசப்படும். வில்வ தளம், ஸமித், பழம் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் பரிபூர்ண லட்சுமி கடாட்சத்தை அடையலாம். வெண்தாமரையில் செய்யும் ஹோமம் வாகன ப்ராப்தியும் சிவந்த தாமரையால் செய்யும் ஹோமம் சர்வ சித்தியும் தரும்.

பகமாலினிக்கு உகந்தவை:திதி: வளர்பிறை (சுக்லபக்ஷ) த்விதீயை, தேய்பிறை சதுர்த்தசிபுஷ்பம்: செந்தாமரைநைவேத்யம்: சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)

பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி தன்னோ நித்யா ப்ரசோதயாத்என்பது இவளது காயத்ரி மந்த்ரம்

முறை யான உபதேசம் பெற்று; புரச்சரணம் செய்த பின்னர் இந்த ஹோமங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் தங்கு தடையின்றிப் பெறலாம். பகமாலினி நித்யாவுக்கான பூதஜ: முதலில் ஸ்ரீ லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபாபஞ்சோபசார ப்ரிய மானஸாம்பாபஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும், பின்னர் அன்றைய நித்யாவான பகமாலினி நித்யாவை, அவளது யந்த்ரத்தில் தியானிக்கவும்.

பகஸ்வரூபாம் பகினீமமோதாம்ஸம்÷க்ஷõ பயந்தீமகிலாம்ச்ச ஸத்வான்க்லின்னத்ரவாம் ஸ்ரீபகமாலினீம்தாம்ஆகாரரூபாம் ப்ரணமாலி நித்யாம்

என்று கூறி பகமாலினி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும். மேற் கூறிய நாமாவளியால் பகமாலினி தேவிக்கு அவளுக்கு உகந்த செந்தாமைரப் பூக்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும், தேவிக்கு உரிய நைவேத்யமான சர்க்கரையைச் சமர்ப்பிக்கவும். முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் பகமாலினி தேவியின் காயத்ரியைக் கூறி கர்ப்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS