ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

ஆனி மாதம் யாருக்கு லாபம்?

ADVERTISEMENTS









ஆனி மாதம் எப்படி இருக்கும் (16.06.11 முதல் 16.07.11 வரை) 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (குடும்ப மகிழ்ச்சி)

லட்சியத்துடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசிநாதன் செவ்வாய் பலமற்று இருக்க நட்பு கிரகங்களால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். முன்னேற்றம் தருகிற பாதை எதுவென அறிந்து நடைபோடுவீர்கள். பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். பணிகள் சிறப்பதற்கான வாய்ப்பு அமைந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.  அரசு தொடர்புடைய செயல்பாடுகள் எளிதாக நிறைவேறும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நலம் காத்திடுவர். தொழிலதிபர்கள் உற்பத்தி, தரம் உயர்ந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி கூடுதல் வருமானம் பெறுவர். பிறசலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தேவை நிறைவேறும். வியாபாரிகள் சந்தையில் குறைந்த போட்டியை எதிர்கொள்வர். விற்பனை பெருகி உபரி வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணம், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவர். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமை, உற்சாகத்துடன் நடந்து குடும்பநலத்தை சிறப்பாக்குவர். வருமானம் நன்றாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணிகளை நிறைவேற்றுவர். விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபத்துடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழும் எதிர்பார்த்த பதவியும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் தாராள பணவரவும் உண்டு. மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில்வளம் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 11.7.11 காலை 6.11 முதல் 13.7.11 காலை 10.04 மணி வரை

வெற்றி நாள்: ஜூன் 30, ஜூலை 1, 2 நிறம்: மஞ்சள், வெள்ளை   எண்: 2, 3

ரிஷபம் (உடல்நிலை கவனம்)

தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் மாறுபட்ட பலன் தருகிற இடங்களில் உள்ளனர். இதனால் செயல்களில் நிதானமும், முன்யோசனையும் பின்பற்றுவது அவசியம். தகுதிக்கு மீறிய செயல்திட்டங்களையோ, செலவையோ தவிர்ப்பது நல்லது. பேச்சில் வசீகரம் இருப்பினும், இடம், பொருள் அறிந்து பேசுவது நன்மை பெற உதவும். உடல்நலம் சீராக இருக்க தகுந்த ஓய்வு, ஊட்டம் தரும் உணவுப்பழக்கம் பின்பற்றுவது நல்லது. பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். வழக்கு, விவகாரங்களில் உங்கள் நலம் விரும்புபவர்களின் உதவியால் சமரச தீர்வு பெறலாம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு ஒற்றுமை மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். வெளியூர் பயணங்களை பயன் கருதி மேற்கொள்ளலாம். தொழிலதிபர்கள் சுமாரான உற்பத்தியை பெறுவதற்கு கூட குறுக்கீடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள் உடல்நலத்தை சீராக பேணுவதால் மட்டுமே பணிகளை சிறப்பாக நிறைவேற்ற இயலும். அளவான பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். அளவான விற்பனையும், மிதமான லாபமும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை இருக்கும். இதனால் நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்க்கலாம்.  சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் விற்பனை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வர். அரசியல்வாதிகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதால் நன்மை பெறலாம். விவசாயிகளுக்கு ஓரளவு மகசூலும் கால்நடை வளர்ப்பினால் தேவையான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து சராசரி தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: பத்ரகாளியை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.உஷார் நாள்: 16.6.11 காலை 6 முதல் 18.6.11 காலை 8.17 மணி வரை மற்றும் 13.7.11 காலை 10.05 முதல் 15.7.11 மாலை 4.01 மணி வரைவெற்றி நாள்: ஜூலை 3, 4நிறம்: ஆரஞ்ச், சிமென்ட்    எண்: 1, 8

மிதுனம் (பிள்ளைகளால் பெருமை)

பிறர் மனமறிந்து இதமுடன் பேசுகின்ற மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலக் குறைவாக அமர்ந்துள்ளார். இதனால் மனதில் நம்பிக்கை குறைவு, கோபம் மிகுதல்,  அவமானப்படுதல் ஆகிய நிலைகளை எதிர் கொள்ளலாம். கவனமுடன் நடப்பதால் சிரமம் தவிர்க்கலாம். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். பணம் வரும் நல்வாய்ப்புக்களை பயன்படுத்துவதால் முன்னேற்றமும் உபரி வருமானமும் கிடைக்கம். திட்டமிட்ட பயணங்களை பணிகளுக்கு தகுந்தவாறு மாறுதல் செய்ய வேண்டியிருக்கும். பிறரது சொந்த விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தம்பி, தங்கைகள் சொல்கிற ஆலோசனை புதிய திருப்பம் தரும். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு, பாதுகாப்பு பணி அவசியம். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலைவாய்ப்பில் சிறப்பிடம் பெறுவர்.  உடல்நல ஆரோக்கியம் பேணுவதில் சில குறுக்கீடு வந்து பின்னர் நலம்பெறும். நிர்ப்பந்த பணக்கடனை சரிசெய்ய நிலுவை பணவரவுகளைப் பெற கூடுதல் முயற்சி செய்வீர்கள். எதிரியால் தொந்தரவு வராத அனுகூல நிலை வளரும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். மகிழ்ச்சியும் பெருமிதமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் அதிக கண்காணிப்புடன் உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் குடும்பத்தேவையின் பொருட்டு பணிபுரிவதில் அக்கறையுடன் ஈடுபடுவர். முக்கிய செலவுகளுக்கான பணவசதி கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப் போட்டியை சமாளித்து சராசரி விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்பாக செயல்புரிந்து நற்பெயரும் சலுகை பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். கணவரின் அன்பு, சீரான பணவசதி துணைநிற்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பின் பேரில் நல்ல லாபம் சம்பாதிப்பர். அரசியல்வாதிகள் எதிர்ப்புவளராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு திருப்திகரமாகும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே அதிக மார்க் பெற இயலும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் பணவரவு சீராகி மங்கல நிகழ்வு ஏற்படும்.உஷார் நாள்: 18.6.11 காலை 8.18 முதல் 20.6.11 மாலை 4.54 மணி வரை மற்றும் 15.7.11 மாலை 4.01 முதல் 16.7.11 நாள் முழுவதும்வெற்றி நாள்: ஜூலை 5, 6நிறம்: பச்சை, வெள்ளை   எண்: 2, 5

கடகம் (சம்பள உயர்வு)

பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் இந்த மாதம் மூலம் நட்சத்திரத்தில் கேதுவின் சாரத்தில் தனது சாரத்தை துவங்குகிறார். கேதுவின் மூன்றாம் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் மனதில் ஆன்மிக சிந்தனை ஊற்றெடுக்கும். தெய்வ சிறப்புகள் தொடர்பான செய்திகள் உங்களைத் தேடிவரும். செவ்வாய், கேது, சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள்பலம் சிறப்பாக உள்ளது. புதிய செயல்பாடுகளுக்கான முயற்சியெடுக்க நல்ல மாதம். முக்கிய தேவைகளுக்கான பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தம்பி, தங்கைகள் ஆதரவாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். புத்திரர்கள் ஆர்வமிகுதியால் கவனக்குறைவான செயல்களில் ஈடுபட நேரலாம். கவனமுடன் வழிநடத்துவதால் சிரமம் குறையும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். சுபநிகழ்வும் ஏற்படும். நண்பர்களின் உதவியால் எதிர்காலத்திற்குரிய சில செயல்பாடுகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி கூடுதல் லாபம் அடைவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளஉயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் அதிக கொள்முதல், கூடுதல் விற்பனை என்கிற இலக்குடன் செயல்படுவர். விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப்பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். குடும்பத்தேவை திட்டமிட்ட வகையில் பூர்த்தியாகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் உற்பத்தி விற்பனையை உயர்த்துவர். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் புகழ்பெற நல்வாய்ப்பு உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் வருமானம் கூடும். மாணவர்கள் நற்பெயர் பெறும் நோக்கில் படித்து தரத்தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.உஷார் நாள்: 20.6.11 மாலை 4.55 முதல் 23.6.11 அதிகாலை 3.39 மணி வரைவெற்றி நாள்: ஜூலை 7, 8நிறம்: வாடாமல்லி, கருநீலம்       எண்: 4, 7

சிம்மம் (உற்பத்தி சுமார்)

நற்செயல்கள் செய்து புகழ் பெறுகின்ற சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் பதினொன்றாம் இடமான ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். குருவின் அமர்வு அனுகூலத்துடன் உள்ளது. புதிய முயற்சிகளை துவங்கி வாழ்வில் வளம் பெறுவீர்கள். நியாயமாக பேசினாலும் கூட, உணர்ச்சி வசப்படுகிற சூழ்நிலையை தவிர்ப்பதால் நன்மை கூடும். தம்பி, தங்கைகள் பாசத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. புத்திரர்கள் ஆர்வத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவர். படிப்பில் வளர்ச்சி அதிகரிக்கும். பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான சிகிச்சை உதவும். ஒவ்வாத உணவு வகை உண்ணக்கூடாது. கடன் தொந்தரவை ஓரளவு சரிசெய்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் நிறைவேற புதியவர்களின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் கடும் முயற்சியால் மட்டுமே உற்பத்தியை தக்க வைக்க இயலும். ஓரளவு வருமானம் உண்டு. பணியாளர்களுக்கு பிரச்னை அதிகமில்லை என்றாலும், உடல்ரீதியான பாதிப்பால் சோர்வு தோன்றும். குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும் அளவுக்கு வருமானம் இருக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளிப்பதில் குழப்பநிலையை அடைந்தாலும், விற்பனையில் சரிவு இராது. லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சிலருக்கு குளறுபடி காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான அளவு பணவரவைப் பெறுவர். சேமிக்கும் நிலை இல்லை. சுயதொழில் நடத்தும் பெண்களுக்கு சுமாரான உற்பத்தி ஓரளவு லாபம் காண்பர். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியால் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே திட்டமிட்ட தேர்ச்சியை பெற இயலும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.உஷார் நாள்: 23.6.11 அதிகாலை 3.40 முதல் 25.6.11 பிற்பகல் 3.21 மணி வரைவெற்றி நாள்: ஜூலை 9, 10நிறம்: ரோஸ், ஆரஞ்ச்   எண்: 3, 9

கன்னி (வரவுக்கேற்ற செலவு)

எல்லாரிடமும் பண்பு, பாசத்துடன் பழகுகிற கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சூரியன், ராகு, சுக்கிரனும் நற்பலன் வழங்குவர். தாமதமான பணிகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். பேச்சில் நிதானமும் வசீகரமும் ஏற்படும். தம்பி, தங்கைகளுக்கு உரிய ஆலோசனை கூறி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற உதவுவீர்கள். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவுக்கு ஏற்ப கூடுதல் செலவும் உருவாகும். புத்திரர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். இஷ்ட தெய்வ அருள் துணைநின்று உதவும். உடல்நலம் சீர்பெற நேரத்துக்கு சாப்பிடுதல், சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது. நிர்ப்பந்தம் செய்யும் கடன்களை ஓரளவு சரிசெய்வீர்கள். கணவன், மனைவி புரிதல் தன்மையுடன் நடந்து குடும்ப வாழ்வை மகிழ்ச்சிநிறைந்ததாக்குவர். நண்பர்களால் நற்பெயர் பெற சூழ்நிலை அமைந்து உதவும். தொழிலதிபர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம் காண்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் பணவரவில் வளர்ச்சிநிலை காண்பர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திபணி நடத்துவர். விற்பனை உயர்ந்து அதிக லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் கருத்து வேறுபாடு கொள்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டுச்செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அதிக பணவரவு காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் பணவரவு கூடும். அரசியல்வாதிகள் அரசின் மூலம் சலுகை கிடைக்கப்பெறுவர். மாணவர்கள் கவனமுடன் படித்து எதிர்பார்த்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும்.உஷார் நாள்: 25.6.11 பிற்பகல் 3.22 முதல் 28.6.11 அதிகாலை 2.19 மணி வரைவெற்றி நாள்: ஜூலை 11, 12, 13நிறம்: மஞ்சள், வெள்ளை    எண்: 2, 3

துலாம் (சிறப்பான விற்பனை)

கடின உழைப்பால் வளம் பெறும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், இந்த மாதம் ராசிக்கு அஷ்டம, பாக்ய ஸ்தானங்களில் பிரவேசிக்கிறார். அனுகூலம் தரும் கிரகங்களாக குரு, புதன் செயல்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையை விலக்கி செயல்படுவதால் திட்டமிட்ட வளர்ச்சி கிடைக்கும். வார்த்தைகளில் கடினப்போக்கை தவிர்ப்பதால் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்பார்த்த நற்பெயர் பெறலாம். தம்பி, தங்கைகள் சொல்லும் ஆலோசனை புதிய பாதையில் நடைபோட உதவும்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர்கள் பணம், பொருள் கேட்டு நிர்ப்பந்தம் செய்வர். பணவரவுக்கேற்ப இயன்ற அளவு நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். உடல்நலம் சீராக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவர அனுகூலம் உண்டு. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தேவைகளை சிக்கனச்செலவில் நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியால் உற்பத்தியை உயர்த்துவர். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நிறைந்த சலுகைகள் பெற அனுகூலம் உண்டு. வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர் கிடைத்து விற்பனையில் வளர்ச்சி காண்பர். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப் பணியை நிறைவேற்ற ஆர்வமுடன் செயல்படுவர். பணி இலக்கு நிறைவேறி நற்பெயர் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் பொறுப்பான செயல்களால் கணவரிடம் நன்மதிப்பு பெறுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். அரிசயல்வாதிகள் புகழை தக்கவைத்துக் கொள்ள கூடுதல் முயற்சியுடன் பணிபுரிவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே படிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் இடர்விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.உஷார் நாள்: 28.6.11 அதிகாலை 2.20 முதல் 30.6.11 காலை 11.17 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 17,  ஜூலை 14, 15நிறம்: பச்சை, நீலம்            எண்: 5, 8

விருச்சிகம் (சுமாரான பணவரவு)

நேர்மையுடன் நடந்து செயல்களில் வெற்றி பெறும் விருச்சிகராசி அன்பர்களே!உங்கள் ராசியில் ராகுவும், ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்க்கை பெற்று ஏழாமிடத்தில் உள்ளனர். சுக்கிரன், சனி நற்பலனை வழங்குவர். மனதில் குழப்பமும் நம்பிக்கை குறைவும் ஏற்படலாம். உங்களின் நலன் விரும்புபவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. பேச்சிலும் செயலிலும் மந்தகதி இருக்கும். தம்பி, தங்கைகளின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை வளர்க்கும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறையும், பயணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் செயல்திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்றாலும், அவர்களது நட்பு வட்டாரம் குறித்து கவனமாயிருங்கள். உடல்நலக்குறைவு ஏற்படலாம். சிறிய பிரச்னைக்கும் உடனடியாக டாக்டரை அணுகுங்கள். கணவன், மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். நியாயமாக செயல்படுவதால் பிரிவு வராத நன்னிலை தொடரும். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவுவதால் சிரமம் வரலாம். கவனம். பணவரவு சுமாராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் சற்று பின்னடவைச் சந்திப்பர். லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் குளறுபடிகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதில் அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்தால் எதிர்விளைவே ஏற்படும். வியாபாரிகள் போட்டி அதிகரிப்பால் சஞ்சலம் கொள்வர். அளவான விற்பனை, மிதமான பணவரவு என்ற நிலை இருக்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலக் குறைவினால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். சலுகைகளைக் கேட்பதிலும், தோழிகளுடன் கொடுக்கல் வாங்கலிலும் நிதானம் நல்லது. குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். வீட்டுச்செலவுக்கு சற்று தட்டுப்பாடு ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான லாபம் காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் ஊக்கத்தினால் மனதில் உற்சாகம் பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் விளையாட்டு குணத்தை தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் விலகி வளம் பெறலாம்.உஷார் நாள்: 30.6.11 காலை 11.18 முதல் 2.7.11 மாலை 5.49 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 18, 19, ஜூலை 15நிறம்: சிவப்பு, வெள்ளை          எண்: 1, 6

தனுசு (சிறந்த சலுகைகள்)

இனிய வார்த்தை பேசி பிறரை மகிழ்விக்கும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். கேது, செவ்வாய் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர். நல்லவர்களின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவீர்கள். பேச்சில் நிதானம் இருக்கட்டும். பிறருக்கு உதவுவதிலும் அளவு வேண்டும். தம்பி, தங்கைகள் முன்னேற்றம் அடைவர். வீடு, வாகன வகையில், இப்போது இருக்கிற வசதி நீடிக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பைப் பெறுவீர்கள். புத்திரர்களை ஊக்கப்படுத்துவதிலும் கண்டிப்பதிலும் மிதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். நிலுவைப்பணம் வசூலாகும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். அடுத்தவர் குடும்ப விவகாரம் பற்றி தம்பதியர் பேசுவதை தவிர்ப்பது அவசியம். உறவினர்களின் நன்மதிப்பு, உதவி முக்கிய தருணங்களில் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் தேவை ஓரளவு நிறைவேறும். எதிர்பாராத வகையில் சிலருக்கு தனபிராப்தி கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதில் உள்ள இடையூறை சரிசெய்வர். வளர்ச்சி பெருகி கூடுதல் ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்கள் தமது பொறுப்பை உணர்ந்து பணியில் ஈடுபடுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் அபிவிருத்திப் பணிகளைச் செய்வர். விற்பனையை அதிகப்படுத்த சற்று விலையைக் குறைத்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைத்து விடும். நிறுவனத்தின் புகழ் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் தாமதப்பணிகளை நிறைவேற்றி மனநிம்மதி பெறுவர். கொடுக்கல், வாங்கல், சீராகும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் அதிக கவனம் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணி செய்து சமூகத்தில் வரவேற்பு பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபமும் கிடைக்கும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து கடந்த கால சரிவைச் சரிசெய்வர். தேர்ச்சி விகிதம் கூடும்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் உபரி பணவரவும் கிடைக்கும்.உஷார் நாள்: 2.7.11 மாலை 5.50 முதல் 4.7.11 இரவு 10.12 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 20, 22நிறம்: நீலம், வெள்ளை              எண்: 2, 8

மகரம் (எதிரிகள் ஜாக்கிரதை)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் நன்மதிப்பு பெறும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள சூரியன் பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு அதிக நற்பலன்களை அள்ளி வழங்குவர். பேச்சிலும் செயல்களிலும் முன்னேற்றம் இருக்கும். சமூகப்பணியை இயன்ற அளவு செய்வீர்கள். தம்பி, தங்கைகள் திறமையுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறுவர். வீடு, வாகன பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். தாய்வழி உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். புத்திரர்கள் உடல்நலக்குறைவிற்கு உட்படலாம். சீரான உணவுப் பழக்கம், சிகிச்சை உடல்நலத்தை சரிசெய்யும். எதிரிகளின் கெடுசெயலை உணர்ந்து மனம் வருந்துவீர்கள். தெய்வவழிபாடு திடநம்பிக்கை வளர உதவும். கணவன், மனைவியிடையே புரிதல்திறன் குறைந்து சச்சரவு வரலாம். விட்டுக்கொடுத்து நடப்பதால் வாழ்க்கை சிறப்பு பெறும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்குவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிஇலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள், தங்கள் செயல்திறனை பயன்படுத்தி பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் பிரச்னை அதிகரிக்காத வாழ்வு தொடர்ந்திடும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் லாபம் காண்பர். விலை மதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறையும். விரும்பிய பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி தரதேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் எதிரித்தனம் விலகி வாழ்க்கைமுறை சிறப்பாகும்.உஷார் நாள்: 4.7.11 இரவு 10.13 முதல் 7.7.11 அதிகாலை 1.06 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 23, 24நிறம்: பச்சை, ஆரஞ்ச்       எண்: 5, 6

கும்பம் (குடும்ப ஒற்றுமை)

நிகழ்கால நடப்புகளுக்கு ஏற்ப செயல்படும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் செயல்படுகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு எதிரான பலன்களைத் தரலாம். செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவியால் புத்துணர்வு பெறுவீர்கள். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவதிலும், அவர்களிடம் உதவி பெறுவதிலும் நிதானம் வேண்டும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சுயதிறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். நல்லவர்களின் ஆசி குடும்ப நன்மைக்கு துணை நிற்கும். பூர்வசொத்தில் அளவான வருமானம் கிடைக்கும். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். எதிரிகளால் வருகிற குழப்பங்களை முறியடித்து வளர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வை உருவாக்குவர். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து சுமாரான லாபம் பெறுவர். பாக்கி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவுக்கு சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளுடன் இணக்கமான போக்கு இராது. வியாபாரிகள் போட்டியை எதிர்கொண்டு விற்பனையில் திருப்திகர நிலை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தாமத பணிகளை நிறைவேற்றி நற்பெயரும் சலுகைப்பயனும் அடைவர். குடும்பப் பெண்கள் எதிர்கால தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி விற்பனையில் புதிய இலக்கை அடைவர். லாபம் உயர்ந்து சேமிப்பு உருவாகும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளித்து புதிய பதவி பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் நல்லமுறையில் படித்து திட்டமிட்டபடி தேர்ச்சி அடைவர். உடல்நலத்தில் கூடுதல் கவனம் நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில்வளர்ச்சியும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.உஷார் நாள்: 7.7.11 அதிகாலை 1.07 முதல் 9.7.11 அதிகாலை 3.29 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 26, 27நிறம்: நீலம், சிவப்பு  எண்: 8, 9

மீனம் (தேவை நிறைவேறும்)

நல்லதை மட்டுமே மனதில் நினைக்கும் மீன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இந்தமாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், குரு, சுக்கிரன், கேது செயல்படுகின்றனர். பணவரவு அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். முறையாக பயன்படுத்தி நற்பலன் பெறுவீர்கள். பேசும் வார்த்தை மங்கலத்தன்மையுடன் இருக்கும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். பூர்வ சொத்தில் வருகிற வருமானங்களை தகுந்த கண்காணிப்புடன் பெற்றுக்கொள்வது நலம் தரும். உடல்நல ஆரோக்கியம் பேணி காத்திடுவீர்கள். எதிரிகள் தந்த தொந்தரவு குறையும். உறவினர்களின் வருகையால் குடும்பமகிழ்ச்சி அதிகரிக்கும். பணபரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வதால் அலைச்சல், பணச்செலவை தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் கொள்வர். புதிய ஒப்பந்தம் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் கொள்முதலை உயர்த்த கடன் பெறுகிற முயற்சியில் ஈடுபடுவர். விற்பனை சீரான முன்னேற்றம் பெறும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் நற்பெயர் பெறுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வான வாழ்க்கை நடத்துவர். குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும்.  சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் விற்பனை இலக்கை உயர்த்துவர். நல்ல லாபத்துடன் பாக்கிப்பணமும் வசூலாகும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறுவர். பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைத்து உபரி பணவரவை பெற்றுத்தரும். மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி அடையலாம்.

பரிகாரம்: தன்வந்திரியை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.உஷார் நாள்: 9.7.11 அதிகாலை 3.30 மணி முதல் 11.7.11 காலை 6.10 மணி வரைவெற்றி நாள்: ஜூன் 28, 29நிறம்: இளம்சிவப்பு, சிமென்ட்    எண்: 1, 4









ADVERTISEMENTS
ADVERTISEMENTS